search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

    நெட்டப்பாக்கம் அருகே மழையில் விழுந்து கிடந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாகூர்:

    நெட்டப்பாக்கத்தை அடுத்துள்ள பண்டசோழநல்லூரை சேர்ந்தவர் மல்லிகா (48). நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பண்டசோழநல்லூர் வடக்குவெளி சாலையில் கனமழையின் காரணமாக விழுந்து கிடந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட மல்லிகா சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி விழுந்து படுகாயமடைந்தார்.

    இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மகள் பிரியா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, ஏட்டு செஞ்சிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×