என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வலங்கைமான் அருகே கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி- உறவினர் கைது
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதி காந்தி நகரை சேர்ந்தவர் நேசமணி. இவருடைய மகன் சாது (வயது 25), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (21) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுகு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சாது-ஐஸ்வர்யா இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சாது தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக நேற்று தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு ஐஸ்வர்யாவின் தங்கை கணவர் கவியரசன்(27) என்பவரும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது.
அப்போது ஜஸ்வர்யா, கவியரசன் ஆகியோர் திடீரென சாதுவின் நெஞ்சில் கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வலியிலேயே சாது பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா, கவியரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.