search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஆண்டிப்பட்டி பகுதியில் விடிய விடிய மழை

    ஆண்டிப்பட்டி பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் நீர் நிலைகள் வறண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விவசாயிகளும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி பகுதியில் சாரல் மழை பெய்தது.

    நேற்று இரவும் ஆண்டிப்பட்டி, பாலக்கோம்பை, கோவில்பட்டி, தெப்பம்பட்டி வைகை அணை க.விலக்கு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரலாக தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது. இதனால் குளிர்ச்சி ஏற்பட்டது.

    குடிநீருக்காக ஏங்கிய பொதுமக்களுக்கு இந்த மழை நிம்மதியை தந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிலங்களை உழுது பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 65 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே புதிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    Next Story
    ×