search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புடலங்காய்
    X
    புடலங்காய்

    ஆத்தூர் பகுதியில் புடலங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    பருவ மழை பொய்த்து போனதால் ஆத்தூர் பகுதியில் புடலங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆத்தூர்:

    தமிழ்நாடு முழுவதும் பருவ மழைப் பொய்த்துப் போனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டி ஆத்தூர், வீரக்கல். போடிக்காமன் வாடி, சித்தையங்கோட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் புடலங்காய் விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    ஒவ்வொருவரும் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் புடலங்காய் கொடியை வளர்த்து வருகின்றனர். கடந்த மாதம் புடலங்காய் ரூ.5, 6 விற்பனை ஆனது. தற்போது ரூ. 1,2 க்கு தான் செல்கிறது என்று விவசாயி முருகன் நம்மிடம் கூறினார்.

    மேலும் இந்தப் புடலங்காய் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நிலக்கோட்டை, கரூர் மற்றும் கேரளாவிற்கும் செல்கிறது பருவ மழை பொய்த்து போனதால் சொட்டு நீர் பாசனமும் கை கொடுக்காத நிலையில் டேங்கர் தண்ணீர் விலைக்கு வாங்கி காப்பாற்றி வருகிறோம்.

    இப்படி காப்பாற்றி வரும் கொடியை இரவு நேரத்தில் காட்டுப்பன்றி முதலிய வனவிலங்குகள் அழித்து செல்லாமல் இருப்பதற்கு சேலை போர்வை போன்றவைகளை வேலியாக அமைத்தும் இரவு நேரத்தில் வெடி வெடித்தும் வருகிறோம் என்றனர் விவசாயிகள்.

    Next Story
    ×