என் மலர்
செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர்
தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது. இதற்காக புதிய திட்டம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாணவ மாணவிகளிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது என்றார்.
Next Story