search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டை கொத்தளத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் காட்சி.
    X
    கோட்டை கொத்தளத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் காட்சி.

    நாளை சுதந்திர தினம் - சென்னை கோட்டையில் பலத்த பாதுகாப்பு

    சுதந்திர தின விழா நடைபெறும் கோட்டையில் கொத்தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமைக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது உள்பட 22 விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    இதையொட்டி கோட்டை கொத்தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகளை வைத்து கமாண்டோ போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உள்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துறைமுகங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    Next Story
    ×