என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஊத்தங்கரை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்தங்கரை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  ஊத்தங்கரை:

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சிவமூர்த்தி (வயது32). தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த கேப்டன் (29) என்பவரது உறவு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

  இதனால் சிவமூர்த்திக்கும், கேப்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து நேற்று மாலை கேப்டன் தனது உறவு பெண்ணை காதலிப்பதை கைவிடுமாறு சிவமூர்த்தியிடம் கூறியுள்ளார். அப்போது இவர்களுக்குள் திடீரென மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

  இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் உருட்டுக்கட்டையால் சிவமூர்த்தியை சரமாரியாக தாக்கியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சிவமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

  இது குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததன் பேரில் கேப்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×