search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder threatening"

    • களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் வாறுகால் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
    • பொன்ராஜ் உள்ளிட்டோர் வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து வாறுகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பன்னீர்தாஸ் (வயது53), மேலப்பத்தையை சேர்ந்த ஜெயக்குமார் (40), சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த பொன்ராஜ் (40) ஆகியோர் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை கற்களை போட்டு அடைத்து, வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த களக்காடு நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலரான அந்தோணிசாமி மனைவி சித்ரா (38) தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சித்ராவுக்கு, பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கணவரை பார்த்து விட்டு வேல்செல்வி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஐயாகுட்டி, முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை கருங்குளத்தை சேர்ந்தவர் வானுமாமலை என்ற குரளி வானுமாமலை. இவர் மீது களக்காடு, நாங்குநேரி, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை நாங்குநேரி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதையடுத்து அவரது மனைவி வேல்செல்வி (வயது28) நாங்குநேரி வந்து கணவரை பார்த்து விட்டு, நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மூன்றடைப்பு பஜாரில் சென்ற போது, செங்குளத்தை சேர்ந்த ஐயாகுட்டி, பாணாங்குளத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த 2 பேரும், காரை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று வேல்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐயாகுட்டி, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×