search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் மறியலுக்கு வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    ரெயில் மறியலுக்கு வந்தவர்களை படத்தில் காணலாம்.

    புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு- ரெயில் மறியலுக்கு முயன்ற 42 பேர் கைது

    திண்டுக்கல்லில் ரெயில் மறியலுக்கு முயன்ற பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வ அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் தமிழ் தேசிய கட்சி சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கட்சியின் மாநில தலைவர் தமிழ்நேசன் தலைமையில் துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் பொதுச் செயலாளர் முல்லை நாதன், மாவட்ட தலைவர் ஜோசப் சந்தியாகு, செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் ரங்கராஜ் என ஏராளமானோர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரெயிலை மறிக்க அவர்கள் முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 17 பெண்கள் உள்பட மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். முன்னதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×