search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கொடைக்கானலில் பயிர் சாகுபடிக்கு கைகொடுத்த சாரல் மழை

    கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையால் பயிர்சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், பூண்டு, காளிபிளவர், முட்டைகோஸ், பீட்ரூட், சவ்சவ், பட்டாணி, காபி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த 4 வருடங்களாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    இந்த வருடமும் கொடைக்கானலில் மழை குறைந்ததால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதும் விவசாயத்திற்கு கைகொடுக்கவில்லை. தற்போது கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் மழையினால் காய்கறிகள் செழித்து வளர தொடங்கி உள்ளன. கன மழை பெய்ததால் காய்கறிகள் அழுகும் நிலை உள்ளது. தற்போது சாரல் மழையே தொடர்ந்து பெய்து வருகிறது.

    மேலும் இதமான சீதோசனம் நிலவி வருவது காய்கறி வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×