search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் சாகுபடி"

    • பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. அக்டோபர்- 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 451.60 மி.மீ.,நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 342.66 மி.மீ ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 41.39 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 15.25 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 28.98 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 1.770 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1642 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1160மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,765 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 612 மெட்ரிக் டன்அளவு இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டரங்கில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக கலெக்டர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 144 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பின், தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பயறு வகை சாகுபடி செய்வதால், சாகுபடி செலவு குறைவாகவும், 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயறு வகை பயிர்கள் பயிரிடுவதால் மண் வளம் மேம்படுகிறது. இப்பயிர்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதன் வாயிலாக, மண் வளம் அதிகரித்து, அடுத்து பயிர் சாகுபடியின் போது, விளைச்சல் அதிகரிக்கிறது.எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • நிலக்கடலை பயிர் சாகுபடியில் ஒரு செடிக்கு 150 முதல் 160 கடலை விற்பனை செய்யப்படுகிறது.
    • எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள வலசுப்பட்டி பிள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னம்மாள் ராமன். இவர் தனது மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்தார்.

    எஸ்.புதூர் ஒன்றிய வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உதவி அலுவலர் பால முருகனின் நவீன கடலை சாகுபடி அறிவுரைக்கு ஏற்ப, கடலை விதைகள் வரிசை முறையில் ஒரு அடி இடைவெளியில் விதைகள் பதிக்கப்பட்டு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இலைவழி தெளிப்பு மற்றும் ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் கடை பிடித்தார்.

    அவருடைய மானாவாரி நிலத்தில் பயிரிட்ட கடலை அறுவடை செய்யப்பட்டதில் ஒரு கடலை செடியில் சுமார் 150 முதல் 160 நிலக்கடலைகள் வரை சாகுபடி இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு சரியான அளவில் மண்ணை அணைத்து சாகுபடி செய்ததால் நிலக்கடலை விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது.

    இது விவசாயிகளிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. ஏக்கருக்கு சுமார் 1500-ல் இருந்து 1600 கிலோ வரை மகசூல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயி ராமன் எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சி.
    • விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னகுமாரபாளையம் பகுதியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சியாக விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் அரசப்பன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, விதைச்சான்றுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த பயிற்சியின் போது குறுகிய வயதுடைய தானியம் மற்றும் தீவனம் என இரட்டைப் பயன்பாடு கொண்டதும் அதிக மகசூல் தரக்கூடியதுமான கோ (எஸ்) 32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரித்து அடியுரம் இடுதல் மற்றும் பூச்சி நோய் நிர்வாகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

    ×