search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 1¼ டன் ரே‌சன் அரிசி பறிமுதல்

    நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 1¼ டன் ரே‌சன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌சன் அரிசி அதிக அளவு கடத்தப்படுகிறது.

    கார், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அரிசி கடத்தல் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. ஆனால் சமீப காலமாக ரெயில் மூலம் கேரளாவுக்கு ரே‌சன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    ரே‌சன் அரிசி கடத்தலை தடுக்க பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகளும் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவையில் இருந்து நாகர்கோவில் வந்து பின்னர் பாசஞ்சர் ரெயிலாக திருவனந்தபுரம் செல்லும் இந்த ரெயில் மூலம் ரே‌சன்அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக பறக்கும்படை தாசில்தார் சதானந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் அந்த ரெயில் நாகர்கோவில் வந்த போது சோதனை நடத்தினார்கள். அப்போது ரெயில் பெட்டிகளின் இருக்கைகளின் அடியிலும் அதேபோல் கழிவறைகளிலும் ரே‌சன் அரிசி மூட்டைகள் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் 1¼ டன் ரே‌ஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் இருக்கைக்கு கீழே ரே‌சன் அரிசி மூட்டைகளை பதுக்கி கடத்தியதும் அவற்றை நெய்யாற்றின்கரையில் கீழே இறக்கியதும் வீடியோ காட்சி மூலம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காட்சியில் அரிசி கடத்தியவர்களின் உருவங்கள் தெளிவாக தெரிந்தும் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×