என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராயப்பேட்டை:

  காசிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற டகுள் சுரேஷ்.இவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. தண்டையார்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற் கிடமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் காசிமேடு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பதும், இவரும் இவரது நண்பர்களான நரேஷ்குமார், ரமேஷ், சந்தோஷ் குமார், கமல், பிரேம்குமார் ஆகிய 6 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ரவுடி சுரேசை கொலை செய்ததும் தெரிய வந்தது.

  இதைத்தொடர்ந்து தமிழரசன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். சுரேஷ் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு தமிழரசன் மற்றும் அவரது நண்பர்களை அடித்து தாக்கி உள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் உள்பட 6 பேரும் சுரேசை கொலை செய்தனர்.

  Next Story
  ×