என் மலர்

  செய்திகள்

  கமல்ஹாசன்
  X
  கமல்ஹாசன்

  கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல்ஹாசன் தலைமையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
  சென்னை:

   நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

  வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ந்தேதி நடைபெற உள்ளது. இதில் அவர் கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுக்க உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

  நாளை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.

  பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நடக்கும் கூட்டம் என்பதாலும் கட்சியின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இணைந்த பிறகு நடைபெறும் கூட்டம் என்பதாலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×