என் மலர்

  செய்திகள்

  கொள்ளை சம்பவம் நடந்த டிரைவர் வீட்டை படத்தில் காணலாம்.
  X
  கொள்ளை சம்பவம் நடந்த டிரைவர் வீட்டை படத்தில் காணலாம்.

  திருச்சி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  துறையூர்:

  திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல், அரசு பஸ் டிரைவர். நேற்றிரவு பணி முடிந்ததும் வீட்டிற்கு வந்த அவர், சாப்பிட்டு விட்டு குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கினார். அப்போது வீட்டின் கதவை அடைத்த அவர், தாழ்ப்பாள் போடாமல் தூங்கி விட்டார்.

  இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது, வீட்டின் தனி அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல் இது குறித்து உடனடியாக துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்றிரவு தங்கவேல் குடும்பத்தினர், வீட்டின் கதவை அடைத்த நிலையில், தாழ்ப்பாள் போடாமல் தூங்கியதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளதும், பீரோ சாவியை எடுத்து திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  Next Story
  ×