என் மலர்

  செய்திகள்

  சாலை மறியல்
  X
  சாலை மறியல்

  புதிதாக திறக்கப்பட்ட தெரு குழாய்களில் தண்ணீர் வராததால் பெண்கள் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிதாக திறக்கப்பட்ட தெரு குழாய்களில் தண்ணீர் வராததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர் மேற்கு பகுதி 6-வது வார்டுக்கு உட்பட்ட முருகப்பா நகர் காட்டு பொன்னியம்மன் நகர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெருக் குழாய்கள் அமைக்கப்பட்டன.

  இன்று காலை தெரு குழாயை முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் திறந்து வைத்தார். ஆனால் தெரு குழாயில் தண்ணீர் வராததால் குடங்களுடன் காத்திருந்த பெண்கள் ஆத்திரம் அடைந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

  தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

  Next Story
  ×