என் மலர்

  செய்திகள்

  கடத்தல்
  X
  கடத்தல்

  வத்தலக்குண்டு அருகே மைனர் பெண்களை கடத்திய 2 பேர் போக்சோவில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு அருகே மைனர் பெண்களை கடத்திய 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

  வத்தலக்குண்டு:

  வத்தலக்குண்டு அருகே உள்ள அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை திருமண ஆசை காட்டி திருப்பூருக்கு அழைத்துச் சென்றார்.

  இது குறித்து அந்த பெண்ணின் தந்தை விருவீடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அஜித்குமாரின் பெற்றோர் முத்துச்சாமி, சமுத்திரம், உறவினர் ராசு ஆகியோரை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

  தொடர்ந்து திருப்பூரில் இருந்த மைனர் பெண்ணை அழைத்து வந்தனர். அஜித்குமார் மீது நிலக்கோட்டை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அஜித்குமாரும் கடத்தப்பட்ட பெண்ணும் அண்ணன் தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  இதேபோல் சித்தரேவு கிழக்குத் தெருவைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் சிலுவத்தூரைச் சேர்ந்த குமார் (25) என்பவர் செல்போனில் பேசி பழகி வந்தார். இது காதலாக மலரவே கடந்த 16-ந் தேதி அந்த பெண் திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

  போலீசார் விசாரணை நடத்தியதில் குமார் அந்த பெண்ணுடன் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

  மைனர் பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்து குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  Next Story
  ×