search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்- அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

    அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    அத்தி வரதர் சுவாமியை, பொதுமக்கள் தரிசிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து காணவரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் பாதுகாப்பும் தமிழக அரசு செய்திட வேண்டும்.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள் எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசு உதவி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை, இரவு 11 மணி வரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் தற்போது இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப் படுவதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் தரிசன நேரம் நிர்வாக காரணங்களால் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப் படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

    காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×