என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
  ஊத்தங்கரை:

  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள நாகம்பட்டி போயர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது37). லாரி டிரைவரான இவரது மனைவி லட்சுமி.

  இந்த நிலையில் கேசவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை லட்சுமி அவரை கண்டித்துள்ளார். தொடர்ந்து  கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த கேசவன் தனது மனைவி என்று கூட பார்க்காமல் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

  பின்னர் படுகாயம் அடைந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய லாரி டிரைவர் கேசவனை கைது செய்தனர்.

  கைதான அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திவிட்டு ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×