search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி தாக்குதல்"

    • நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர்.
    • என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்கா குளத்தில் திடீரென இறங்கினார்.

    குளத்தில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்து சித்ரவதை செய்கிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கத்தியபடி இருந்தார்.

    நீண்ட நேரம் குளத்தில் கத்தியபடி இருந்த வாலிபரை வெளியே வருமாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

    ஆனால் வாலிபர் குளத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர்.

    நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர். என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.

    குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டார் என குழந்தைகளிடம் தவறாக கூறுகிறாள். மேலும் அவரது மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.

    தினமும் என்னை அடிக்கிறார். என்னால் அடி வாங்க முடியவில்லை. விவாகரத்து வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என வேதனையோடு தெரிவித்தார்.

    அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் கூறிய விசித்திரமான வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
    • நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர்.

    ஆலந்தூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(46). இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.

    இதை அடுத்து போலீசார், நூர் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது விசாரணைக்கு செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் நூர் முகமது விமானத்தில் பயணம் செய்து வந்திருப்பதும், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர். இதுபற்றி திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய அரசு என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தோப்பு பட்டியை சேர்ந்தவர் பர மேஸ்வரன். பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகள் எழில்ராணி (வயது 31). இவருக்கும், ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (37) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    தர்மலிங்கம் தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

    ஊருக்கு வரும்போது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழில்ராணி புகார் செய்தார்.

    போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மீண்டும் தர்மலிங்கம் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழுதி கொடுத்துள்ள னர்.

    இதையடுத்து எழில்ராணி பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து ஊருக்கு வந்த தர்மலிங்கம் குழந்தைகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம் மனைவியை அடித்து உதைத்து மாமனாரின் பெட்டிக்கடையையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் எழில்ராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார்.
    • ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்னந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வடிவேல் (வயது29). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜோஸ்பினை அவரது கணவர் வடிவேல் சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோஸ்பின் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் திலீப்.

    இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    அதனை அவரே செல்போனில் படம் எடுத்தார். அந்த வீடியோவில் மனைவியை நான்தான் தாக்கினேன், அவரது முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்லமாட்டாள் என்று கூறி மீண்டும் அவரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

    இந்த காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பலரும் திலீப்பை கண்டித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில் குடிபோதையில் தனது கணவர் அடித்து உதைத்ததாகவும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×