என் மலர்

  இந்தியா

  வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த கணவர் கைது
  X

  வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
  • கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் திலீப்.

  இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

  அதனை அவரே செல்போனில் படம் எடுத்தார். அந்த வீடியோவில் மனைவியை நான்தான் தாக்கினேன், அவரது முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்லமாட்டாள் என்று கூறி மீண்டும் அவரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

  இந்த காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பலரும் திலீப்பை கண்டித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

  இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

  அதில் குடிபோதையில் தனது கணவர் அடித்து உதைத்ததாகவும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×