என் மலர்
நீங்கள் தேடியது "assaulting wife"
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது36). இவரது மனைவி இந்திராணி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சொக்கலிங்கம் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.
இந்திராணி தேனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்திராணி தனியாக வசித்து வருகிறார்.
வெளிநாட்டில் இருந்து ஊர்திரும்பிய சொக்கலிங்கம் மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் இந்திராணியிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் 2 பேர் மீது வழக்குபதிவு செய்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர்.
இதேபோல் தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). இவரது மனைவி முத்துபிரியா. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டில் முத்துபிரியா வசித்து வருகிறார். சம்பவத்தன்று அருண்குமார் அங்கு சென்று முத்து பிரியாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் முத்துபிரியாவின் தாய் சீதாலெட்சுமி மற்றும் சிலர் அருண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தேனி போலீசார் 4 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






