search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காதலரை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் வீடு முன்பு தீக்குளிக்க முயன்ற மாணவி

    காதலித்து ஏமாற்றிய வாலிபரை திருமணம் செய்து வைக்க கோரி கலெக்டர் வீட்டின் முன்பு மாணவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் எதிரே மாவட்ட கலெக்டர் இல்லம் உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அங்கு இளம்பெண் ஒருவர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது பெயர் மற்றும் விபரங்களை கேட்டனர். அவர் எதுவும் கூறாமல் கதறியபடி தரையில் படுத்து உருண்டு அழுதார். அவருடன் அவரது பெற்றோர்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    பின்னர் போலீசாரை உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த எனது பெயர் திவ்யா ரோசலின் (வயது24). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். அதே கல்லூரியில் பழனி திருநகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அருண்ஜோஸ் பிரான்சிஸ். மெக்கானிக்கல் என்ஜினீரியங் படித்து வந்தார். அவருடன் நட்பாக பழகிய நிலையில் அது காதலாக மலர்ந்தது.

    பின்னர் நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்தோம். அருண் அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் என்னை வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை பலவந்தமாக ஆசைக்கு இணங்க வைத்தார். அதன்பின்னர் பலமுறை என்னுடன் நெருக்கமாக பழகினார்.

    கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என என்னிடம் உறுதி அளித்தார். ஆனால் தற்போது என்னை தவிர்த்து வருகிறார். தொலைபேசியில் பேசினாலும் பதில் அளிப்பதில்லை. என்னை தங்கை என்று கூறி வருகிறார். இந்த வி‌ஷயம் எனது வீட்டிற்கு தெரிந்ததால் எனக்கு மிகுந்த தலைகுனிவு ஏற்பட்டது.

    இது குறித்து நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் அனைத்து மகளிர் போலீசுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் நடந்தது பழனி என்பதால் அங்கு புகார் அளிக்க கூறினர். இதுபோல பல போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாவட்ட கலெக்டர் அலுவகம் மற்றும் எஸ்.பி.யிடமும் புகார் அளித்துள்ளேன். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டர் வீட்டின் முன்பு தற்கொலை செய்ய வந்துள்ளேன் என்றார். இதனையடுத்து திவ்யாவை நகர் வடக்கு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் புகார் தெரிவித்த பழனி கல்லூரி மாணவரையும் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் வீட்டின் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×