search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் தண்ணீர் கொண்டு வரும் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் - தெற்கு ரெயில்வே
    X

    ரெயிலில் தண்ணீர் கொண்டு வரும் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் - தெற்கு ரெயில்வே

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வரும் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை சமாளிக்கும் விதமாக, ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வீதம் 6 மாத காலத்துக்கு சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இந்தநிலையில் குடிநீர் கொண்டு வருவதற்கான வேகன்களை கேட்டு தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.



    தமிழக அரசின் இந்த கடிதத்திற்கு தெற்கு ரெயில்வே தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டுவருவதற்கான செலவையும், குடிநீர் ஏற்றி கொண்டுவரும் வேகன்களை சுத்தம் செய்வதற்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே கூறி உள்ளது.

    ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீரை ஏற்றி சென்னைக்கு ரெயில் மூலமாக கொண்டு வந்து வில்லிவாக்கத்தில் இறக்குவதற்கான பணிகளை தொடங்குவதற்காக தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு, தமிழக அரசை தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டு உள்ளது.

    Next Story
    ×