என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jolarpet"
- சதாப்தி விரைவு ரெயில் ஜோலார்பேட்டை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஜோலார்பேட்டையில் சதாப்தி விரைவு ரெயில் நின்று செல்லும் வசதியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வருகிற 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னை-பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் சதாப்தி விரைவு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரெயில், ஜோலார்பேட்டை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி சதாப்தி விரைவு ரெயில் (வ.எண். 12027) ஜோலார்பேட்டையில் இரவு 8.14 மணிக்கு நின்று செல்லும். இந்த வசதி வருகிற 9-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
மறுமார்க்கமாக கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரெயில் (வ.எண். 12028) ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் காலை 7.49 மணிக்கு நின்று செல்லும். இந்த வசதி வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜோலார்பேட்டையில் சதாப்தி விரைவு ரெயில் நின்று செல்லும் வசதியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வருகிற 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.