search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் சாரல் மழை
    X

    சென்னையில் சாரல் மழை

    சென்னையில் இன்று காலை பரவலாக சாரல் மழை பெய்தது.

    சென்னை:

    பருவமழை பொய்த்ததால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சென்னையில் மழை பெய்யாதா? தண்ணீர் பிரச்சினை தீராதா? என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    அடுத்து 2 நாட்கள் சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னையில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் வேளையில் சாரல் மழை பெய்ததால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் இதாமான சூழ்நிலை நிலவியது.

    கடந்த 2 நாட்களாக மாலை வேளைகளில் மேக மூட்டம் காணப்பட்டது என்றாலும் மழை வரவில்லை. இன்று காலை சாரல் மழை பெய்ததால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழை பெய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலில் அவதிப்பட்டு வந்தனர். மாமல்லபுரத்தில் இன்று காலை 5 மணியில் இருந்து 8 மணி வரை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வெயில் அடிக்காமல் குளிர்காற்று வீசிவருவதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விடுதிகளில் தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதி காலையில் வாக்கிங் சென்ற போது சாரல் மழையில் நனைந்து சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×