search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் மழை"

    • காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சென்னை மாநகர பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, கோயம்பேடு, அண்ணாநகர், சூளைமேடு, அரும்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    மாதவரத்தை அடுத்துள்ள வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்காடு பாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போன்று ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், கோவிலம்பாக்கம், பரங்கிமலை, போரூர், மதுரவாயல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    இதனால் இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாறியது. காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர். அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்த படியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததையும் காண முடிந்தது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பெய்த மழையால் காலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் மழையில் நனைந்தபடியே பொருட்களை வாங்கி சென்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்கள் மழை காரணமாக பாதிப்பையும் சந்தித்தனர்.

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், ராமாபுரம், வானகரம், வளசரவாக்கம், போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
    • அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

    அரும்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், மதுரவாயல், நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    • சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    சென்னை:

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவான மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது.

    எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (11.06.2023) மற்றும் நாளை (12.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
    • 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.

    அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

    • மெரினா கடற்கரையில் பலத்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது.
    • இன்று காலை அதிகமான தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்தது. பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கி.மீ தூரத்தில் கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டு உள்ளது. இது நாளை இலங்கை வழியாக குமரிக்கடல் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது. இது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது.

    இந்த மழை விடிய, விடிய நீடித்தது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு மேல் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.

    எழும்பூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, திருவான்மியூர், மாதவரம், திருவொற்றியூர் ராயபுரம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, தேனாம்பேட்டை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மழையின் காரணமாக சில இடங்களில் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்றனர்.

    தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை முடிந்து வந்த கிறிஸ்தவர்கள் பலத்த மழையின் காரணமாக சிரமம் அடைந்தனர்.

    மெரினா கடற்கரையில் பலத்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. இன்று காலை அதிகமான தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணி நடந்தது. சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலும் சீற்றமாக காணப்பட்டது. கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கில மேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

    • தொடர் மழையால் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது.

    இந்நிலையில், மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது. மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி, தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    மேலும், சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    • சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை எச்சரிக்கையால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

    கனமழை எச்சரிக்கையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை கொட்டியது.
    • திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இன்று காலை பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென பலத்த மழை கொட்டியது.

    சிறிது நேரம் கனமழையாக கொட்டிய பின்னர் சாரல் மழையாக நீடித்தது.

    எழும்பூர், அரும்பாக்கம், அண்ணாநகர், அயனாவரம், கோயம்பேடு, மதுரவாயல், பெரம்பூர், கொரட்டூர், பூந்தமல்லி, தாம்பரம், பல்லாவரம், பட்டினப்பாக்கம், துரைப்பாக்கம், கோடம்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காலை 8.30 மணி வரை பல இடங்களில் சாரல் மழையாக நீடித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    மழை காரணமாக முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாததால் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை கொட்டியது. திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இன்று காலை பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆவடியில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 67 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பூண்டி, தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூர் பகுதியிலும் கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்)வருமாறு:-

    பள்ளிப்பட்டு-4

    பொன்னேரி-67

    ஜமீன் கொரட்டூர்-13

    பூந்தமல்லி-3

    பூண்டி-17

    தாமரைப்பாக்கம்-10

    திருவள்ளூர்-8

    ஊத்துக்கோட்டை-3

    ஆவடி-4

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்தது. தொடர்ந்து காலை 9 மணி வரை கனமழை நீடித்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். கனமழையால் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பக்தர்களின் வாகனங்கள் கோயிலுக்குள் சென்று வரும் தெற்கு பகுதி நுழைவு வாயில், பல மாதங்களாக மூடி கிடப்பதால், இன்று காலையில் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியினர் மற்றும் பக்தர்கள் கிழக்கு வாசலை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

    அதனால் பக்தர்கள் நடந்து செல்லவும், கார், பைக், ஆட்டோக்களில் வளாகம் உள்ளே சென்று வரவும் அவதிப்பட்டனர்.

    ஒத்தவாடை தெரு, கிழக்கு ராஜ வீதி, கலங்கரை விளக்கம், ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    • புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, அரும்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    • தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாகவே சென்னையில் பகல் நேரங்களில் வெயிலும், இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கே.கே.நகர், மேடவாக்கம், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    ×