என் மலர்

  செய்திகள்

  நெற்குன்றத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
  X

  நெற்குன்றத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெற்குன்றத்தில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போரூர்:

  நெற்குன்றம் அழகம்மாள் நகரைச் சேர்ந்தவர் ராம்குமார். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நெற்குன்றம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அவ்வழியே மீன்பாடி வண்டியில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ராம்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதனை ராம்குமார் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் கல்லால் ராம்குமாரை சரமாரியாக தாக்கினர்.

  அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர் பின்னர் ராம்குமார் பையில் இருந்த ரூ 500ஐ பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர்.

  இது குறித்து ராம்குமார் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஜெகதீசன், ராம்பிரசாத் என்பது தெரிந்தது.

  கோயம்பேடு மார்கெட்டில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×