search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்

    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    திருவொற்றியூர்:

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் நடந்த புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரையை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழா வருகிற 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும். இதில் முதல்- அமைச்சர் பங்கேற்க வேண்டும். இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளார். அதே போன்று தமிழக அமைச்சரும் நெல்லை மாவட்டத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்துக்கள் விழாக்களுக்கு, சமயம் சார்ந்த பூஜைகளுக்கு தடை விதிப்பதும் அதற்காக போராடுவதும் சிறை செல்வதும் வழக்கமாகி விட்டது. தமிழகத்தில் இந்த சூழ்நிலை மாற வேண்டும். இந்த காலகட்டத்தில் இந்து சமய விழாக்கள் அனைத்திற்கும் தமிழகஅரசு தடையாக உள்ளது இந்த நிலை மாறவேண்டும். இந்துக்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமையே தவிர ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது நியாயமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தாமிரபரணி புஷ்கரம் குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், பா.ஜனதா திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் கணேஷ், விசுவ இந்து பரி‌ஷத் மாநில தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    Next Story
    ×