search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறையில் மழை ஓய்ந்தது - முகாமில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்கள் வீடு திரும்பினர்
    X

    வால்பாறையில் மழை ஓய்ந்தது - முகாமில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்கள் வீடு திரும்பினர்

    வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த மழைநீர் வடிவ தொடங்கியதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பினார்கள்.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்த டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை.

    பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வால்பாறையில் இருந்து சோலையாறு அணை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    வால்பாறையில் போக்குவரத்து இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வால்பாறையில் நேற்று முதல் மழை ஓய்ந்தது. இதனால் வெள்ளம் வடிந்து வருகிறது. வால்பாறையில் வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வால்பாறை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் வால்பாறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
    Next Story
    ×