என் மலர்

  செய்திகள்

  சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
  X

  சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-2 மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

  சின்னசேலம்:

  சின்னசேலம் அருகே உள்ள கடத்தூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் கவிதா(18). இவர் கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கவிதா அதே பகுதியில் உள்ள தனது பாட்டி அங்கம்மாளுடன்(67) வசித்து வந்தார்.

  சம்பவத்தன்று கவிதா தனது பாட்டியுடன் பக்கத்து தெருவுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சுதாகர்(23) என்பவர் கவிதாவை வழிமறித்து, அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். 

  இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

  Next Story
  ×