search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை 13-வது நாளாக குறைந்தது: இன்று 21 காசுகள் குறைப்பு
    X

    பெட்ரோல், டீசல் விலை 13-வது நாளாக குறைந்தது: இன்று 21 காசுகள் குறைப்பு

    இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரி வரி விதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால் விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதன் பேரில் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 21 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.48க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.71.73 ஆக உள்ளது.

    பெட்ரோல், டிசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Petrol #Diesel
    Next Story
    ×