search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை 4-வது நாளாக குறைப்பு
    X

    பெட்ரோல்-டீசல் விலை 4-வது நாளாக குறைப்பு

    4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மாதம் தொடர்ச்சியாக 20 நாட்கள் அதிகரித்தால் பெட்ரோல் லிட்டர் 80 ரூபாயையும், டீசல் 73 ரூபாயையும் தாண்டியது.

    இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன.

    இந்த நிலையில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி வரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.31 ஆகவும், டீசல் ரூ.73.14 ஆகவும் இருந்தன. அவற்றின் விலை 30-ந்தேதி முதல் இன்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது.

    4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 ஆகவும் உள்ளன.

    கடந்த 30-ந்தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன. 31-ந்தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன.

    பெட்ரோல் நேற்று 6 பைசாவும், இன்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

    ஆனால் விலை உயரும் போது 25 பைசா, 30 பைசா, 35 பைசா என அதிகரித்தது. விலை உயர்த்தப்பட்ட அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    Next Story
    ×