என் மலர்

  செய்திகள்

  விழுப்புரம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
  X

  விழுப்புரம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் அருகே மது குடிக்கும் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி காலனியை சேர்ந்தவர் பூபதி (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா (38).

  பூபதிக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு 9 மணிக்கு பூபதி வீட்டுக்கு வந்தார். அப்போதும் மது குடித்திருந்தார்.

  இதையறிந்த சுதா தினமும் ஏன் மது குடித்து விட்டு வருகிறீர்கள்? என தட்டிக்கேட்டார். இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த பூபதி தன்னிடம் இருந்த பேனா கத்தியால் மனைவி சுதாவின் வயிற்றில் குத்தினார். இதில் சுதா படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய பூபதியை கைது செய்தனர்.

  Next Story
  ×