search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
    X

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

    ஊராட்சி செயலர்களின் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 564 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் செயலர்களாக பணியாற்றி வருபவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியமே பெற்று வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்விலும் இவர்களுக்கு ஊதிய உயர்வு ஏதும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஊராட்சி செயலர்கள் தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் 1,012 பேரில் 840 பேர் நேற்று உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டெங்கு தடுப்பு பணியும் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×