search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான போலீஸ்காரர் செந்தில்குமார்
    X
    பலியான போலீஸ்காரர் செந்தில்குமார்

    கோவையில் வாகன சோதனையின்போது கார் மோதி போலீஸ்காரர் பலி

    கோவையில் வாகன சோதனையின் போது கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து போலீஸ்காரர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 31). இவர் கோவை மாவட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 15-ந்தேதி இரவு கே.ஜி. சாவடி அருகே உள்ள வேலந்தாவளம் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது ஒரு கார் வந்தது. அதனை நிறுத்துமாறு போலீஸ்காரர் சைகை காட்டினார்.

    ஆனால் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் செந்தில்குமாரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு போலீஸ்காரர் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×