என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரத்து 198 கன அடி
Byமாலை மலர்14 Sep 2017 10:30 AM GMT (Updated: 14 Sep 2017 10:30 AM GMT)
காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு 10 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் உயர்ந்து 10 ஆயிரத்து 198 கன அடியானது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அந்த அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியதால் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 50 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று மேட்டூர் அணைக்கு 10 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் உயர்ந்து 10 ஆயிரத்து 198 கன அடியானது. மகாபுஷ்கர விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து நேற்று அதிகாலை முதல் காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 4 நாட்களில் நாகை மாவட்டம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை.
நேற்று 77.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றும் 77.33 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story
×