என் மலர்

  செய்திகள்

  களக்காடு அருகே பெண்கள் சாலை மறியல்
  X

  களக்காடு அருகே பெண்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே பெண்கள் சாலை மறியல்

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வழங்க வில்லை என்று புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நாகன்குளம் விலக்கில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சீரான குடிநீர் வழங்க கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் களக்காடு-சேரன்மகாதேவி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி,சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார், களக்காடு நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது அவர்கள் பொதுமக்களிடம்,ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது என்றும், விரைவில் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் உறுதி கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  Next Story
  ×