search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் சாலை மறியல்"

    • மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதி மக்கள் தேக்கம்பட்டியில் இருந்து கருப்பூர் வழியாக சேலம் வரும் சாலையில் திரண்ட னர். பின்னர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 40-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சேலம் வந்த பஸ்சையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கருப்பூர் போலீசார், பஞ்சாயத்து செயலாளர், கவுன்சிலர்கள் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மதுரையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    • 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக் குட்பட்ட 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.

    மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள 50-வது வார்டான சிம்மக்கல், காமாட்சிபுரம் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். வேறு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பணம்கொடுத்து குடம் தண்ணீரை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வலியுறுத்தியும் இன்று மதுரை மாவட்ட நூலகம் எதிரே உள்ள சிம்மக்கல் சந்திப்பு சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டனர்.

    அவர்கள் திடீரென சாலையில் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச் சினை சரி செய்யப்படும் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இந்நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் ஆற்றுத் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யாததால் மிகவும் சிரமாக இருப்பதாகவும், குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர், அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று அறப்பளீஸ்வரர் கோவில் அருகே காலி குடங்கள், சிண்டெக்ஸ் டேங்களை சாலையில் வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநி யோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
    • அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி அடுத்துள்ள பூதாளம்கொட்டாய், ராமன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் இப்பகுதி கிராமங்களுக்கு கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் தவித்து வந்தனர். குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை பெரியாம்பட்டி பேருந்து நிலையம் முன்பு திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலை வர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    உங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனால் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    கோபி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோபி:

    கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

    இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.

    பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×