search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Road Blockade"

    • மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த மூங்கில்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோரையன்காடு பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதி மக்கள் தேக்கம்பட்டியில் இருந்து கருப்பூர் வழியாக சேலம் வரும் சாலையில் திரண்ட னர். பின்னர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 40-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சேலம் வந்த பஸ்சையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கருப்பூர் போலீசார், பஞ்சாயத்து செயலாளர், கவுன்சிலர்கள் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இந்நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் ஆற்றுத் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யாததால் மிகவும் சிரமாக இருப்பதாகவும், குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர், அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று அறப்பளீஸ்வரர் கோவில் அருகே காலி குடங்கள், சிண்டெக்ஸ் டேங்களை சாலையில் வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநி யோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×