என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
செங்கோட்டை அருகே விதவை பெண்ணிடம் தவறாக நடந்த விவசாயி தற்கொலை
Byமாலை மலர்2 Aug 2017 4:52 PM IST (Updated: 2 Aug 2017 4:52 PM IST)
செங்கோட்டை அருகே விதவை பெண்ணிடம் தவறாக நடந்ததாக விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த கரிசல்குடியிருப்பை சேர்ந்தவர் சீனிப்பாண்டியன் (வயது52), விவசாயி. இவரது வீட்டுக்கு அருகே கணவனை இழந்த ஒரு விதவை பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சீனிப் பாண்டியன், அந்த விதவை பெண் வீட்டுக்கு சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார்.
அப்போது அந்த பெண் கூச்சல் போட்டு கத்தியதால், சீனிப்பாண்டியன் வெளியே ஓடி வந்து விட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக அந்த பெண் அச்சன்புதூர் போலீசில் சீனிப்பாண்டியன் மீது பாலியல் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அச்சன்புதூர் போலீசார், சீனிப்பாண்டியனை விசாரணைக்கு போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர்.
இதில் அவமானம் அடைந்த சீனிப்பாண்டியன் விஷம் குடித்து விட்டு வீட்டில் படுத்து கொண்டார். நீண்ட நேரம் சீனிப்பாண்டியன் எழும்பாததால் அவரது மனைவி மாலையம்மாள் கணவரை எழுப்பினார். அப்போது சீனிப்பாண்டியன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சீனிப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×