என் மலர்

  செய்திகள்

  கும்பகோணம் அருகே பள்ளி மாணவி மாயம்
  X

  கும்பகோணம் அருகே பள்ளி மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே உள்ள ஆட்டுக்காரபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் புவனா (வயது 19). கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியிருந்தார். அதற்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதில் புவனா தேர்ச்சி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அவரை பெற்றோர் தொடர்ந்து திட்டிவந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் மனமுடைந்து இருந்த மாணவி கடந்த 14-ந் தேதி கடைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×