search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக  2-வது நாளாக தேர்வு -போலீசில் பணியாற்றுபவர்கள் எழுதினர்
    X

    பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை, தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக 2-வது நாளாக தேர்வு -போலீசில் பணியாற்றுபவர்கள் எழுதினர்

    • போலீசில் பணியாற்றி கொண்டிருக்கும் அரசின் குறிப்பிட்ட தகுதியை பெற்றிருந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான தேர்வு நடைபெற்றது.
    • 10 மணிக்கு பின்னர் வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நேற்று தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்காக 7,918 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 6,603 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்திருந்தனர். 1,315 பேர் வரவில்லை.

    இன்று 2-வது நாளாக போலீசில் பணியாற்றி கொண்டிருக்கும் அரசின் குறிப்பிட்ட தகுதியை பெற்றிருந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான தேர்வு நடைபெற்றது. பாளையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்த இந்த தேர்வில் 478 போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டார்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்வை எழுதுவதற்காக 478 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 384 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

    இதேபோல் தூத்துக்குடி சின்னகோவிலில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த 2-வது நாள் தேர்வுக்கு 705 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 563 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் அனைவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு பின்னர் வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தேர்வையொட்டி அந்த மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×