என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது -முகவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Byமாலை மலர்2 May 2021 9:24 AM GMT (Updated: 2 May 2021 9:24 AM GMT)
வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து, வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போதையை நிலவரப்படி திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 30%க்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.
ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான்! வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் – எங்காவது ஓர் அதிகாரி அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிகக் கவனம் அவசியம். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.
எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர் குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.
Next Story
×