search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் ஸ்டாலின்

    கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை

    சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் 3199 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    சென்னை

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

    தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 3199 வாக்குகளும், ஆதிராஜாராம் 1449 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×