search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.டி.ரவி மற்றும் பாஜக தலைவர்கள்
    X
    சி.டி.ரவி மற்றும் பாஜக தலைவர்கள்

    திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி... பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கடும் தாக்கு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வாய்ப்பே இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற புத்தகத்தை பாஜக இன்று வெளியிட்டது. புத்தகத்தை கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என்று கூறினார்.
     
    குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடும் கேள்விக்கே இடமில்லை என்ற அவர், அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக நடத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார்.

    தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக விரைவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பல்வேறு பாஜக மேல்மட்ட தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர் என்றும், பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றும் சி.டி.ரவி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வி.கே.சிங், கட்சியின் மூத்த தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×