search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    குஷ்புவிடம் 8 கிலோ தங்க நகைகள்- வேட்பு மனுவில் தகவல்

    ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் குஷ்பு, கையிருப்பில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் இருப்பதாக வேட்புமனுவில் கூறி உள்ளார்.
    சென்னை:

    ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நடிகை குஷ்பு நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    கையிருப்பில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் இருப்பதாக கூறி உள்ளார். ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள காரும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    8.55 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டி உள்ளார். இதன் மதிப்பு ரூ.3 கோடியே 42 லட்சம்.

    மொத்தமாக தன்னிடம் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×