search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    பெண்கள் நல்வாழ்வுக்கு பல்வேறு செயல்திட்டங்கள்- கமல்ஹாசன் அறிவிப்பு

    பெண்கள் நல்வாழ்வுக்கு பல்வேறு செயல்திட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெண்கள் நல்வாழ்வுக்கு 7 செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    * அரசு சேவையில் இருக்கும் சீருடைத்துறையில் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

    * துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவில் தங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசரகால இலவச விடுதிகள் அமைக்கப்படும்.

    * பெண்களால்... பெண்களுக்காக... பெண்களுக்கென்று... இயங்கும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும்.

    * தனித்து வாழும் தாய்மார்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    * ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை பெண்களுக்கு இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்படும்.

    * மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.

    * பட்டதாரிகளுக்கு வசிப்பிடத்தில் இருந்து 100 சதுர கி.மீ. தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.

    * மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மையை ஊக்குவிக்க ஆரோக்கியமான தமிழகம் இயக்கம் தொடங்கப்படும்.

    * ஒலிம்பிக் வீரர்களை வெளிக்கொண்டுவர ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
     
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×