search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது: டிடிவி தினகரன்

    அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
    சென்னை:

    சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர்  டி.டி.வி. தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் கூட்டணி அமையும்.

    அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. எங்களது ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதுதான்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×