search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    X

    ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    தமிழக ஆளுநரின் சட்டமன்ற உரை மஸ்கோத் அல்வா போன்று அமைந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். #TNAssembly #Governoraddress #MKStalin
    சென்னை:

    தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் திட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்த உரை குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரை குறித்து கூறியதாவது:-

    ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் அமைந்துள்ளது. ஆளுநர் உரையில் தமிழக அரசின் கடன் சுமை குறித்து எதுவும் இல்லை.  அரசுக்கு வருவாய் குறைந்துள்ளதை ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார். வருவாய் இல்லாத போது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும்?

    விவசாயிகளின் கோரிக்கை, வேலைவாய்ப்பின்மை  குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. ஜி.எஸ்.டி.யை பாராட்டியதன் மூலம் ஆளுநர் உரை மத்திய அரசால் தயாரிக்கப்பட்டதா என சந்தேகம் உள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNAssembly #Governoraddress #MKStalin #tamilnews
    Next Story
    ×